கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 2, 2016

கலை கல்லூரிகள் ஜூன் 8ல் திறப்பு !

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள், கோடை விடுமுறைக்கு பின், 8ம் தேதி திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில், 83 அரசு கல்லுாரிகள் உட்பட, 700க்கு மேற்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகள்
செயல்படுகின்றன. இவற்றில், 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கான பருவத்தேர்வுகள், ஏப்ரலில் துவங்கி, மே 6ல் முடிவடைந்தன. இதன்பின், கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளும், கோடை விடுமுறை முடிந்து, வரும் 8ம் தேதி திறக்கப்பட உள்ளன.

'கல்லுாரிகள் திறக்கும்போது, புதிய மாணவர்கள் வந்தால், அவர்களை, 'ராகிங்' செய்யக் கூடாது; பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டும்; இன்முகமாக பழக வேண்டும்' என, மாணவர்களை அறிவுறுத்துமாறு, கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment