B.Ed., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 16, 2016

B.Ed., மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது?: குழப்பத்தில் பேராசிரியர்கள்

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில்,2015 முதல், பி.எட்., படிப்புக் காலம், இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வெளியிட்டது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில், பி.எட்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் அறிமுகமானது.

பருவத்தேர்வு

இதன்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பி.எட்., படிப்பில் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு, முதலாம் ஆண்டு பருவத்தேர்வு வரும், 18ம் தேதி துவங்கி, ஒரு மாதம் நடக்கிறது. இதையடுத்து, விடுமுறைக்குப் பின், மீண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் கல்லுாரிகள் திறக்கப்படும். ஆனால், இரண்டாம் ஆண்டு துவங்க, ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், இரண்டாம் ஆண்டுக்கான வரைவு பாடத்திட்டம் தயாரான போதிலும், என்னென்ன பாடங்கள்; அதற்கான புத்தகங்கள் போன்ற விவரங்கள், இன்னும் முடிவாகவில்லை.தற்போதைய நிலையில், இரண்டாம் ஆண்டு வகுப்பு துவங்கினால், என்ன பாடம் நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு மாதம் தாமதம்

இதுகுறித்து, பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, 'தமிழக உயர்கல்வித் துறை மற்றும் கல்வியியல் பல்கலையின் அலட்சியத்தால், 2015ல், பி.எட்., வகுப்புகள், ஒரு மாதம் தாமதமாக துவங்கின. இதனால், பாடங்களை உரிய காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு, மாணவர்கள் தயாராக இருந்தாலும், என்ன பாடம் நடத்துவது என தெரியாத நிலை உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment