மாணவர்களை குழப்பும் இன்ஜி., கல்லூரி பெயர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 2, 2016

மாணவர்களை குழப்பும் இன்ஜி., கல்லூரி பெயர்கள்

தமிழகத்தில், மாணவர்களை குழப்பும், ஒரே மாதிரியான பெயர்களையுடைய கல்லுாரிகளின் பட்டியலையும், அவற்றின் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், தனியே வெளியிட, அண்ணா
பல்கலைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அண்ணா பல்கலையில், ஜூன் இறுதி வாரத்தில் கவுன்சிலிங் துவங்கி, ஜூலை 31ம் தேதி முடியும். பல கல்லுாரிகளின் பெயர்கள் ஒரே மாதிரியாக உள்ளன; சிறிய அளவிலான வேறுபாடு மட்டுமே உள்ளது. முதல் தர கல்லுாரிகளின் பெயர் போன்றே, தரம் குறைந்த கல்லுாரியின் பெயரும் இருப்பதால், மாணவர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
எனவே, ஒரே பெயரிலான கல்லுாரிகளின் பட்டியலையும், அதன் கவுன்சிலிங் குறியீட்டு எண்ணையும், விரைவில் வெளியிட, அண்ணா பல்கலைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment