ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்.... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 4, 2016

ஒரே நாளில் இரு தேர்வுகள் குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள்....

ஒரே தேதியில் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வும், மின்வாரிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர்.மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஏப்., மே மாதங்களில் அண்ணா பல்கலை
மூலம் எழுத்து தேர்வு நடக்க இருந்தது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 19ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பி.எட்., முதலாம் ஆண்டு தேர்வு வரும் 18ல் தொடங்குகிறது. 'தற்கால இந்தியாவின் கல்வி' என்ற பாடத்திற்கான தேர்வு ஜூன் 19ல்
நடக்கிறது. இதற்கான அறிவிப்பு மின்வாரிய தேர்வு தேதி அறிவிப்பதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது.தற்போது, மின்வாரிய எழுத்து தேர்வும் ஜூன் 19ல் நடக்கிறது. ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும் விண்ணப்பித்தவர்கள் திகைப்பில் உள்ளனர். எனவே மின்வாரிய தேர்வு தேதியை
வேறு தேதிக்கு மாற்ற வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment