தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வ - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 10, 2016

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வ

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது
தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி மாணவர்
களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் எப்போது
நடத்தப்படும் என, அறிவிக்காததால், தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு, 4 சதவீத ஒதுக்கீட்டின்படி, 7,000 இடங்கள் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும். எனவே, இந்த இடங்களுக்கு எப்போது கவுன்சிலிங் நடத்தப்படும் என, மாணவர்கள் தேதியை எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment