விரைவில் பணிநியமனமா ? பாலிடெக்னிக்குகளில் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, June 20, 2016

விரைவில் பணிநியமனமா ? பாலிடெக்னிக்குகளில் காலி பணியிடங்கள் கணக்கெடுப்பு.

,தமிழ்நாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், சிறப்பு பயிலகங்கள் உள்ளன. இவற்றில் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், விரிவுரையாளர், துறைத்தலைவர் முதலான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

  இந்த நிலையில், ஒவ்வொரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் ஒவ்வொரு பணியிலும் அனுமதிக் கப்பட்ட இடங்களின் எண் ணிக்கை, காலியிடங்களின் எண் ணிக்கை உள்ளிட்ட விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் துறைத்தலைவர் பணியில் மட்டும் 190-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதேபோல், கடந்த ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 604 விரிவுரையாளர்கள் ஆசிரி யர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்டு பணியமர்த் தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஓராண்டு ஆகியும் இது வரையில் பணிநியமனம் தொடர்பான அறிவிப்பு கூட வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment