இன்ஜி., கவுன்சிலிங்கில், கவுன்சிலிங் அறைக்கு செல்லும் முன், சாய்ஸ் அடிப்படையிலான பாடப்பிரிவுகளை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என, மாணவர்களுக்கு, கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜி., படிக்க, அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்கில் பங்கேற்று, அரசு இட ஒதுக்கீட்டு இடங்களை பெறலாம். ஒவ்வொரு ஆண்டும், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் இந்த கவுன்சிலிங்கில் பல விதிமுறைகள் உள்ளன. அதன்படி, இன்ஜி., கவுன்சிலிங்கில் பாடப்பிரிவுகளையும், கல்லுாரிகளையும் தேர்வு செய்வதில் குழப்பங்கள் இருக்கும்.
இந்த குழப்பங்கள், சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தினமலர் சார்பில், ஆண்டுதோறும் உங்களால் முடியும் இன்ஜி., கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகம் முழுவதும், 25 இடங்களில் உங்களால் முடியும் நடத்தப்பட்டு, நிறைவு நிகழ்ச்சியாக சென்னை, அண்ணா நகரில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி வளாகத்தில், நேற்று மாலை நடந்தது.
தினமலர் நாளிதழுடன் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்தும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி செயலர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ், தாளாளர் ரவிச்சந்திரன், முதல்வர் ரீட்டா ஜான், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
அண்ணா பல்கலை கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்த மாணவர்கள், விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் செய்திருந்தாலோ, சில குறிப்புகளை நிரப்பாவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். விண்ணப்பங்களை நிச்சயம் நிராகரிக்க மாட்டர். அதற்கு முன், அண்ணா பல்கலைக்கு சென்று, இன்ஜி., மாணவர் சேர்க்கை பிரிவில் தங்கள் விவரங்களை, அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
சான்றிதழ்களை குறைந்தது இரண்டு, செட் நகல்களாவது எடுத்து, கவுன்சிலிங்கின் போது கொண்டு செல்லுங்கள். கவுன்சிலிங்கிற்கு முன் கல்லுாரிக்கு கட்ட வேண்டிய பணத்தை, டி.டி.,யாக எடுப்பதை விட, ரொக்கமாக கையில் வைத்து கொள்ளுங்கள். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியிலுள்ளவர்கள், தங்களுக்கான கவுன்சிலிங் தேதிக்கு முன்பே அண்ணா பல்கலைக்கு சென்று, அங்குள்ள நடைமுறைகளை பார்த்து விட்டு வருவது நல்லது.
வெளி மாவட்டத்தினர், கவுன்சிலிங் நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பே, அண்ணா பல்கலை வளாகத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவுன்சிலிங் அறைக்கு செல்லும் முன், தங்கள், கட் ஆப் மதிப்பெண்ணுக்கு என்ன பாடப்பிரிவு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்பதை அறிந்து, திட்டமிட்டு கொள்ளவும்.
கவுன்சிலிங் அறையில், பாடப்பிரிவு, கல்லுாரி தொடர்பாக மூன்று, &'சாய்ஸ்&' விருப்ப பாடங்கள் அளிக்க வேண்டும். அதற்கு கவுன்சிலிங்குக்கு முன்பே விருப்ப பாடம், கல்லுாரிகளை முடிவு செய்ய வேண்டும்.
கவுன்சிலிங் அறையில், தங்களுடன் பெற்றோர், உறவினர் யார் வேண்டுமானாலும் ஒருவர் உடன் செல்லலாம். ஆனால், மாணவர்களை குழப்பாத, திடீர் என காரணமின்றி முடிவை மாற்றுவோரை அழைத்து செல்ல வேண்டாம். பல்கலை வளாகத்திலோ, கவுன்சிலிங்கில் இருக்கும் கணினி பதிவாளரிடமோ தேவையற்ற பேச்சுகளோ, ஆலோசனையோ கேட்காதீர்கள்.
உங்கள் படிப்புக்கான பாடத்தை, கல்லுாரியை நீங்களே தேர்வு செய்வது நல்லது. கல்லுாரிகள் தேர்வின் போது, கல்லுாரிகளின் பெயரை விட, அவற்றின் கவுன்சிலிங் எண்ணை கட்டாயம் தெரிந்து வைத்து, அதன் படி, கவுன்சிலிங் பதிவாளரிடம் அந்த எண்ணை பதிய சொல்லுங்கள். கடைசியில் இடம் உறுதியாகும் வரை, கணினியில் பதியப்படும் கல்லுாரி எண், பாடப்பிரிவு ஆகியவை சரியா என்பதை பார்த்து உறுதி செய்யவும். இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் என்ன படிப்பது, எந்த கல்லுாரியில் படிப்பது என்ற குழப்பம், தடுமாற்றம் இருந்தது. ஜே.பி., சார் கொடுத்த விளக்கங்கள் மூலம், சரியான தீர்வு கிடைத்தது. என் போன்ற மாணவ, மாணவியருக்கு இந்த நிகழ்ச்சி நல்ல வழிகாட்டி.
தெ.நந்தினி, மாணவி, கொரட்டூர் கம்ப்யூட்டர் சயின்சா, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கா என்ற குழப்பத்தில் இருந்தேன். &'தினமலர்&' நிகழ்ச்சி என்றதும் குழப்பம் தீரும் என்று ஆர்வத்துடன் வந்தேன். ஜெயப்பிரகாஷ் காந்தி சார், காமெடியாக பேசி, குழப்பத்தை தீர்த்துள்ளார். சரியான நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது எனக்கு உதவியது.
உ.கிரிதர், மாணவர், அரும்பாக்கம் என் மகனின் படிப்பிற்காக விவரங்களை தெரிந்து கொள்ள இங்கு வந்தேன். அதற்கு முன் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆலோசனை அளித்தனர். உங்களால் முடியும் நிகழ்ச்சி, மாணவ, மாணவியர் சந்தேகங்களையும் தீர்த்து வைத்தது.
பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வி மற்றும் கல்லுாரியை தேர்தெடுக்க தடுமாறும் பெற்றோருக்கும் உதவியாக இருந்தது. ரவிசங்கர், பெற்றோர், அம்பத்துார்
No comments:
Post a Comment