இலவச பஸ் பாஸ் பெற மாணவர்களின் விவரங்களை விரைவில் சமர்பிக்க வேண்டும்: அதிகாரிகள் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, June 3, 2016

இலவச பஸ் பாஸ் பெற மாணவர்களின் விவரங்களை விரைவில் சமர்பிக்க வேண்டும்: அதிகாரிகள் அறிவிப்பு

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலை யில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெற்றுத் தர அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் மாணவர் களின் விபரங்களை சமர்பிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. பள்ளி மாணவர் களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம் என போக்குவரத்துக் கழகங்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட் டுள்ளது. இதற்கிடையே, கல்வி மற்றும் போக்குவரத்துத் துறை யும் இணைந்து புதிய பாஸ்களை வழங்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 27 லட்சம் பஸ் பாஸ் வழங்கப்பட்டன. இந்த கல்வி ஆண்டிலும் 27 லட்சம் பஸ் பாஸ் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத் துத் துறை அதிகாரிகளிடம் கேட் டபோது, ‘‘ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விரைவில் அளிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்த உள்ளோம்.

அரசு போக்குவரத்துக் கழகங் களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளி நிர்வாகிகள் தலைமை அலுவலகத் துக்குச் சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எல்லைக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பல்ல வன் இல்லத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது http://www.mtcbus.org/ என்ற இணையதளத்தில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளி நிர்வாகிகள் மாணவர்களின் விபரங்களை வழங்கிய பிறகு உடனுக்குடன் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

No comments:

Post a Comment