நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, June 11, 2016

நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

இதனால், மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யவும், வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை குறிப்பு எடுக்கவும் முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை அலுவலகத்துக்கு பல முறை விண்ணப்பம் அளித்தும், எந்த பதிலும் இல்லை.

இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, &'நோட்டு புத்தகம் அச்சிடும் பணி, தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் மூலமாக நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் வந்ததால், எந்த அரசியல்வாதியின் பெயரும் இல்லாமல், நோட்டின் அட்டை படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய ஆட்சி அமைந்தவுடன், இலவச பொருளுக்கான ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக நோட்டு புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன&' என, தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment