மேற்கத்திய கலாச்சாரம் வேகமாக உலகம் முழுவதும் காலூன்றி வரும் நிலையில், மத்திய அரசின் 'ஸ்கில் இந்தியா மிஷன்' திட்டத்தின் கீழ் அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார மேலாண்மை சம்பந்தப்பட்ட புதிய படிப்புகளை அறிமுகப்படுத்த இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்துள்ளது.
கலாச்சாரங்களின் பல்வேறு கூறுகளை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் விருப்ப பாடமாக இது போன்ற படிப்புகளை சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் செயலாளர் சச்சிதானந்த் ஜோஷி தெரிவித்தவை பின்வருமாறு:-
கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல படிப்புகளை வழங்க ஏ.ஐ.சி.டி.இ-யுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்படி, இந்திரா காந்தி தேசிய கலை மையம் அடுத்த கல்வியாண்டில் இருந்து டிப்ளமோ படிப்புகளை வழங்க துவங்கும். எனினும், இளங்கலை பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பி.எச்.டி படிப்புகளை வழங்க முன்னணி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களுடன் இணைந்துதான் வழங்க இயலும்.
No comments:
Post a Comment