குறைந்த விலையில் நான்கு 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 25, 2016

குறைந்த விலையில் நான்கு 4G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த இந்திய நிறுவனம்

அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தியாவில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை கார்பன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்திலும் 4G தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கார்பன் ஔரா 4G, K9 விராட் ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.6,490 மற்றும் ரூ.5,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிறப்பம்சங்களை பொருத்த வரை கார்பன் ஔரா மற்றும் K9 விராட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 8 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 
மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் K9 ஸ்மார்ட் 4G மற்றும் கார்பன் டைட்டானியம் விஸ்டா 4G ஸ்மார்ட்போன்களில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.5,090 மற்றும் ரூ.5,790 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. K9 ஸ்மார்ட் 4G, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. 
புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கார்பன் டைட்டானியம் விஸ்டா 4G ஸ்மார்ட்போனில் 8GB அளவு இன்டர்னல் மெமரியும், 1GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
இந்தியா முழுக்க 4G ஸ்மார்ட்போன்கள் அனைவரும் வாங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் தலைசிறந்த 4G சேவைகளை அனுபவிக்க வேண்டும் என கார்பன் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்பன் அறிமுகம் செய்திருக்கும் நான்கு ஸ்மார்ட்போன்களும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment