கடைசி நேர பயணத்துக்கு 10% ரயில் டிக்கெட் தள்ளுபடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 29, 2016

கடைசி நேர பயணத்துக்கு 10% ரயில் டிக்கெட் தள்ளுபடி

முதல்கட்ட அட்டவணை தயாரித்த பிறகு காலியாகவுள்ள இடங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியில் ரயில் டிக்கெட்கள் விற்பனை
செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித் துள்ளது.
ரயில்கள் புறப்படுவதற்கு 3 அல்லது 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை தயார் செய்யப்படும். இந்த அட்டவணை தயார் செய்யப்பட்ட பின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் காலி இடம் இருந்தால், அதற்கான டிக்கெட்களை பெறும்போது அதில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
இந்த புதிய முறை வரும் 1-ம் தேதி முதல் அடுத்த நான்கு மாதங்களுக்கு பரிசோதனை முறையில் அமலில் இருக்கும். அதிகளவில் வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment