பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 30, 2016

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'

பேராசிரியர் தகுதித்தேர்வு பட்டியல் தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான, மாநில தகுதி தேர்வு பட்டியலை, வெளியிட தடை கோரிய வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்'
அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளைஉத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த செபாஸ்டியன் செல்வராஜ் தாக்கல் செய்த மனு: 
எம்.எஸ்சி., - -எம்.பில்., படித்துள்ளேன். கல்லுாரி உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான மாநில தகுதி தேர்வை, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை, பிப்., 21ல் நடத்தியது. கணித அறிவியல் பாடத்திற்கான தேர்வை எழுதினேன். தேர்வு முடிவு அக்., 24ல் வெளியானது.
எனக்கு, 190 மதிப்பெண் கிடைத்தது. பிற்பட்டோர் பிரிவிற்கான, 'கட்- ஆப்' 192. கணித அறிவியல் பகுதி, மூன்றுக்கான தாளில், ஐந்து வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் சம்பந்தமின்றி உள்ளன. 'கீ' பதில்களும் தொடர்பின்றி உள்ளன.அவ்வினாக்களுக்கு விடை அளித்திருந்தாலே, முழு மதிப்பெண் வழங்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், எனக்கு, 200 மதிப்பெண் கிடைத்திருக்கும்.மறு மதிப்பீடு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க கோரி, மாநில தகுதி தேர்வு உறுப்பினர் செயலருக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை இல்லை.
தேர்வில் தகுதியான வர்கள் பட்டியலை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஐந்து வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்கி, தகுதியானவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கஉத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். மாநில தகுதி தேர்வு உறுப்பினர் செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment