ஆதார் அட்டையை இனி பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான ஆவணமாக தாக்கல் செய்யலாம் – மத்திய அரசு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 24, 2016

ஆதார் அட்டையை இனி பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான ஆவணமாக தாக்கல் செய்யலாம் – மத்திய அரசு.

ஆதார் அட்டையை இனி பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான ஆவணமாக தாக்கல் செய்யலாம் – மத்திய அரசு.
பிறந்த தேதியுடன் உள்ள ஆதார் அட்டையை இனி பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான ஆவணமாக தாக்கல் செய்யலாம் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான ஆவணமாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சாதுக்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடாமல், குரு அல்லது குருகுலத்தின் பெயரை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார். இதே போல் அரசு ஊழியர்கள் தங்கள் துறை சார்ந்த தடையில்லாச் சான்றிதழ் பெற முடியாத போது, தாங்கள் தங்கள் மேலதிகாரியிடம் முறைப்படி விடுப்பு எடுத்திருப்பதாக சுய வாக்குமூலம் அளிப்பதன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment