பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது??? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 31, 2016

பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது???

பிம் (BHIM app)ஆப்ஸ் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது???
பணமற்ற பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக பாரத் இன்டர்பேஸ் பார் மணி ( பிம்) எனற் புதிய ஆப்சை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார்.ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கும் இந்த ஆப்ஸ், ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு செயல்படும். ஐஓஎஸ் ( ஆப்பிள்) தளத்திற்கான இந்த ஆப்ஸ் விரைவில் வெளியிடப்படும். இந்த புதிய ஆப்ஸ் மூலம் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடன் பணமற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இதர யுபிஐ மற்றும் பாங்க் கணக்குகளோடு தொடர்பு கொண்டு இந்த ஆப்சை பயன்படுத்தலாம்.
*பிம் ஆப்சை எப்படி டவுன்லோடு செய்யலாம்?*
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில்இந்த ஆப்சை டவுன்லோடு செய்யலாம். https://play.google.com/store/apps/details?id=in.org.npci.upiapp
*இந்த பிம் ஆப்சை எப்படி பயன்படுத்துவது?*
இந்த பிம் ஆப்சை, பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்தபின், உங்களுடைய பாங்க் கணக்கை இதில் பதிவு செய்து அதற்கான யுபிஐ னின் எண்ணை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பயன்படுத்துபவரின் மொபைல் எண்தான், பயன்படுத்துபவரின் முகவரியாக இருக்கும். இவ்வாறு ஒருமுறை பதிவு செய்து கொண்ட பின் பிம் ஆப்சைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
*பிம் ஆப்சைப் பயன்படுத்தி எப்படி பணத்தைப் பெறுவது?*
பயன்படுத்துபவர், தங்களுடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து பணத்தைப் பெறலாம்; அவர்களுக்கு பணத்தை அனுப்பலாம். யுபிஐ தொடர்பு இல்லாத பாங்குகளுக்கும் ஐஎப்எஸ்சி எண்ணைப் பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யலாம்.
*இந்த பிம் ஆப்சை ஏற்கும் பாங்குகள் எவை?*
அலகாபாத் பாங்க், ஆந்திரா பாங்க், ஆக்சிஸ் பாங்க், பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா பாங்க், கத்தோலிக் சிறியன் பாங்க், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி பாங்க், தேனா பாங்க், பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ பாங்க், ஐடிஎப்சி பாங்க், இந்தியன் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், இந்துஸ் இந்த் பாங்க், கர்நாடகா பாங்க், கரூர் வைஸ்யா பாங்க், கோடக் மகிந்தரா பாங்க், ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஆர்பிஎல் பாங்க், சவுத் இந்தியன் பாங்க், ஸ்டாண்டர்டு சார்ட்டடு பாங்க், ஸ்டேட பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் பாங்க், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா பாங்க். இதர விவரங்கள்பயனீட்டாளர் பணபரிவரித்தனை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். மொபல் எண் தவிர வழக்கமான பணபரிவர்த்தன முகவரியையும் உருவாக்கி கொள்ளலாம். கியூஆர் குறியீட்டு மூலம் எளிதாக பண பரிவர்த்தனை செய்யாலாம்.
பிம் ஆப்ஸ் இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செயல்படும். விரைவில் இதர மொழி வசதிகளும் செய்து தரப்படும்.

No comments:

Post a Comment