செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 31, 2016

செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது.

செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்டு இருந்த, 50 நாட்கள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதனால், இந்த ரூபாய் நோட்டுகளை, இனி, எங்குமே பயன்படுத்த முடியாது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8ல் பிரதமர், நரேந்திர மோடி 
அறிவித்தார். அதற்கு பதில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தவும், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, புழக்கத்தில் இருந்த, 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளில், 12 லட்சம் கோடி ரூபாய், வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்'செய்வதற்கு அளிக்கப்பட்டிருந்த, 50 நாட்கள் கெடு, நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த செல்லாதரூபாய் நோட்டுகளை இனி, எங்குமே மாற்றவோ, பயன்படுத்தவோ முடியாது.
இனி, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கெடு முடிவடைந்துஉள்ளதால், கடந்த, 50 நாட்களாக நிலவி வந்த பணத் தட்டுப்பாடு நீங்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வங்கி, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது குறித்த எந்த அறிவிப்பும்வெளியிடப்பட வில்லை.
வங்கிகளுக்கு உத்தரவு :
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற் கான காலக்கெடு முடிந்த நிலையில், கையிருப் பில் உள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்
குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள் ளது. தங்களுடைய இருப்பில் உள்ள, இந்த செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த விபரங்களை, நேற்று மாலையிலேயே இ - மெயில் மூலம் அனுப்ப வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, கையிருப்பில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளை, இன்று மாலைக்குள், ரிசர்வ் வங்கியில் செலுத்தும்படியும் உத்தர விடப்பட்டுள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளைத் தவிர மற்ற வங்கிகள் இந்த கணக்கை தாக்கல் செய்வதுடன், பணத்தையும் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment