பணம் எடுக்க கட்டணம்: அடுத்த அதிரடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, December 27, 2016

பணம் எடுக்க கட்டணம்: அடுத்த அதிரடி

ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், வங்கிகளில் இருந்து பணம் எடுத் தால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த, மத்திய
அரசு ஆலோசித்து வருகிறது.

கறுப்பு பணத்தை ஒழிக்க, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட் டது; அதைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்த னைக்கு மாறும்படி வலியுறுத்தி வருகிறது. 

இந்த நிலையில், வங்கிகளில் இருந்து, குறிப் பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் எடுக்கும் போது, அதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என, நிதி அமைச்சகமும், 'நிடி ஆயோக்' அமைப்பும்
தற்போது அளிக்கப்பட்டுள்ளபரிந்துரைகளின்படி, வங்கிகளில் இருந்து, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும்போது, அதற்கு, 0.5 சதவீதம் முதல், 2 சதவீதம் வரை கட்டணமாக வசூலிக்கலாம் என, பரிந்துரைக்கப் பட்டு உள்ளது. அதே நேரத்தில், ஏ.டி. எம்.,இயந்திரங்களில் இருந்து எடுக்கும் பணத்துக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
காங்., ஆட்சியின்போது, இந்த திட்டத்தை, அப்போ தைய நிதியமைச்சர், சிதம்பரம் செயல்படுத்தினார். அவரை தொடர்ந்து நிதியமைச்சராக பதவியேற்ற,  பிரணாப் முகர்ஜி, இந்த திட்டத்தை திரும்பப் பெற்றார்.
இந்த திட்டத்தின்படி, தனிநபர்கள், 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், மற்றவர்கள், 1 லட்சம் ரூபாய் வரையிலும் ரொக்கமாக பெறும்போது, இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு, 0.1 சதவீதம் வரி வசூலிக்கப் பட்டது. இந்த நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், அதிக ரொக்க பரிவர்த் தனைக்கு கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.




பரிந்துரை செய்துள்ளன. விரைவில், பிரதமர், மோடியுடன் விவாதித்து, இதற்கு செயல்வடிவம் கொடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரை

பழைய அனுபவம்
வங்கி ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி வசூலிக்கும் முறை, 2005 முதல், 2009 வரை நடைமுறை யில் இருந்தது. பணத்தை கையாளுவதால், வங்கிகளில் பாதுகாப்பு,நிர்வாக ஏற்பாடுகள் உள்ளிட்டவை செய்வதற்காக, வரி வசூலிக்கப்பட்டு வந்தது. 

No comments:

Post a Comment