மருந்துகள் விலை குறையும்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, December 25, 2016

மருந்துகள் விலை குறையும்...


நீரிழிவு உள்பட 55 நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருந்துகள் விலை கட்டுப்பாட்டு திருத்த ஆணைப்படி, 55 அத்தியாவசிய மருந்துகளின் விலைக்கு மத்திய அரசின் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

இதனால், அந்த மருந்துகளின் விலை, 5 சதவீதத்தில் இருந்து 44 சதவீதம் வரை குறைய உள்ளது. எச்.ஐ.வி. தொற்று, நீரிழிவு, உடல் நடுக்கம், பாக்டீரியா தொற்று, தொண்டை அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளும் இவற்றில் அடங்கும்.

இதுதவிர, மேலும் 29 மருந்துகளின் சில்லரை விலையும் குறைக்கப்பட்டுள்ளது. விலை கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்படாத மருந்துகளை பொறுத்தவரை, அவற்றின் விலையை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கு மிகாமல் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment