அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, December 23, 2016

அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்

அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்

அரசு ஊழியர்கள்களின் சொத்து விவரம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்

*அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை.
பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

*அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள்அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

*பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)

No comments:

Post a Comment