பழைய நோட்டுகள் வைத்திருந்தால் சிறைத் தண்டனை இல்லை: மத்திய அரசு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, December 29, 2016

பழைய நோட்டுகள் வைத்திருந்தால் சிறைத் தண்டனை இல்லை: மத்திய அரசு

மார்ச் 31-க்குப் பிறகு பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை இல்லை, ஆனால் 10 தாள்களுக்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.


அதாவது 10 தாள்களுக்கும் மேல் வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய அரசு தனது அவசரச்சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. 
அதன் படி 10 தாள்களுக்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் அல்லது எவ்வளவு பணம் வைத்திருக்கிறாரோ அதன் 5 மடங்கு மதிப்பு அபராதமாக விதிக்கப்படும் (அதாவதுஇரண்டில் எது அதிகமோ) 
இந்தத் திருத்தத்துடன் கூடிய அவசரச்சட்டம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 
ஜனவரி 1 முதல் மார்ச் 31ம் தேதி வரை பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யப்படும் போது தவறான தகவல் அளித்தால் ரூ.5,000 அல்லது டெபாசிட் செய்யும் தொகையின் 5 மடங்கு, இதில் எது அதிகத் தொகையோ அது அபராதமாக விதிக்கப்படும்.
குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அவசரச்சட்டம் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றதில் முறையான சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment