கடன்களுக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைப்பு: எஸ்.பி.ஐ., வங்கி அறிவிப்பு!!!
எஸ்.பி.ஐ., வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‛டிவி' மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையில் ஏழை, மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்டவும், சிறு, குறு தொழில்
தொடங்குவோருக்கும் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என அறிவித்தார்.
0.9 சதவீதம் குறைப்பு
இதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் குறைத்தது. அதாவது, தற்போதை வட்டி விகிதமான 8.9 சதவீதத்திலிருந்து 8 ஆக இன்று குறைத்துள்ளது.
இதேபோல், எஸ்.பி.ஐ., வங்கியின் கிளை வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. ஐ.டி.பி.ஐ., வங்கி 0.6 சதவீதம் குறைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடன் வட்டி விகிதத்தை 8.20 ஆக குறைத்துள்ளது.
No comments:
Post a Comment