பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 11, 2017

பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்

பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவன முதல்வர் கி.மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2016 ஜூன் மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் 18-ஆம் தேதி தருமபுரி அருகே புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுனத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 எனவே, தேர்வு எழுதியவர்கள் தேர்வு எண் மற்றும் அடையாள அட்டைச் சான்றை சமர்ப்பித்து தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment