பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 6, 2017

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவு.
அரையாண்டு தேர்வு முடிவுகள் எப்படி?

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கொண்டு,தர வரிசை பட்டியல் தயாரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணை வெளியானதில் இருந்து, 100 சதவீத தேர்ச்சி இலக்குஎட்ட, பல்வேறு பணிகள் நடக்கின்றன.
அரையாண்டு தேர்வு விடுமுறையில், பின்தங்கிய மாணவர்கள், மாநில ரேங்க் பெற முயற்சிப்போருக்கு, கல்வித்துறை சார்பில், ஆறு இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடந்தன. இந்த மாணவர்களுக்கு, பள்ளிகளிலும் சிறப்பு கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்து, இரண்டு நாட்களாகி விட்டதால், பாடவாரியாகமாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கொண்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்க, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ’காலாண்டு தேர்வில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களோடு, அரையாண்டு தேர்வு முடிவுகளையும் ஒப்பிட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.’இதில், 40 சதவீதத்துக்கும் குறைவான, மதிப்பெண் பெற்றவர்களால் தான், 100 சதவீத தேர்ச்சி இலக்கு, எட்ட முடியாத நிலை தொடர்கிறது. இவர்களுக்கு, மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடத்தி, ’புளூ பிரிண்ட்’ படி, பாடங்கள் பிரித்தளித்து, தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுசார்ந்து, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், விரைவில் நடக்கும்,” என்றனர்.

No comments:

Post a Comment