வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஜன.20 முதல் மழை வாய்ப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 17, 2017

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் ஜன.20 முதல் மழை வாய்ப்பு

தாய்லாந்து அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதனோடு தொடர்புடைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, அடுத்த சில தினங்களில் மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.

இதன் காரணமாக வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் 26-ம் தேதிக்கு உட்பட்ட நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முதலில் கடலோர மாவட்டங்களில் தொடங்கும் மழை, பின்னர் படிப்படியாக உள் மாவட்டங்களில் பெய்யத் தொடங்கும். இந்த மழை தமிழகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment