புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்கக மாணவர்கள் சேர்க்கை வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்ககத்தில் பொது, நிதி, மார்க்கெட்டிங், சர்வதேச வர்த்த கம், மனித வள மேம்பாட்டு பிரிவு களில் எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.
இதுமட்டுமின்றி எம்.காம்., நிதி, எம்.ஏ., ஆங்கிலம், சமூகவியல், இந்தி படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான தொலைதுார மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இம்மாதம் 31ம் தேதிக்குள் டிகிரி முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.ஏ., படிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 24,925 ரூபாய், எம்.காம்., எம்.ஏ., படிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 11,425 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பல்வேறு யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களின் ஸ்காலர்ஷிப் உண்டு.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டண சலுகை உண்டு. கைதிகள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த பெண்கள், புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை உண்டு.
www.pondiuni.edu.in என்ற இணை யதளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது விண்ணப்பங்களை டவுண்லோடு செய்தே விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2654439, 2654441 ஆகிய என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment