6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 19, 2017

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், தொழிலாளர் நலத் துறை ஆணையாளராக கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
ஆர்.கண்ணன் -ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் (சென்னை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையாளர் -சுகாதாரம்)
எம்.லட்சுமி -வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர்)
கா.பாலச்சந்திரன் -தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முன்னாள் நிர்வாக இயக்குநர்)
என்.முருகானந்தம் -தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையாளர் -2 (இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர்) மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்குத் திரும்பிய அவருக்கு தில்லியிலே பணி வழங்கப்பட்டுள்ளது.
அசோக் டோங்ரே -விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் (மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் இணைச் செயலாளர்) -மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்குத் திரும்பினார்.
ஷில்பா பிரபாகர் சதீஷ் -தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் -கல்வி)

No comments:

Post a Comment