எளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 22, 2017

எளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்

கோவையைச் சேர்ந்த உமாதாணு என்பவர், எளிய முறையில் கணிதம் படிக்க, 'டிவிடி'யை உருவாக்கியுள்ளார். கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு, 77. இவர், கணிதத்தை எளிமையாக கற்பது குறித்து பயிற்சிகள் அளிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, அந்தமான், துபாய் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று, கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

உமாதாணு, மூன்று மணி நேரம் ஓடக்கூடிய, 'டிவிடி'யை தயாரித்துள்ளார். கணிதத்தில், அவரது புதிய அணுகுமுறை, புதிய கருத்துகள், கண்டுபிடிப்புகள், எளிய பயிற்சிகள் ஆகியவை, பாடத்தை இனிமையாக்குகின்றன. மாணவர்கள், போட்டித் தேர்வு, வங்கி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கும் இந்த, 'டிவிடி' மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தொடர்புக்கு: 9360482003

No comments:

Post a Comment