’மத்திய பிரதேசத்தில், ஜன., 12ல் அனைத்து, பள்ளி, கல்லுாரிகளிலும், ’சூரிய நமஸ்காரம்’ பயிற்சி மேற்கொள்ளப் படும்’ என, மாநில அரசு அறிவித்துள்ளது.
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜன., 12ல், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், சூரிய நமஸ்காரம் பயிற்சியை மேற்கொள்ள, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவேகானந்தர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, யோகா கலையின் ஓர் அம்சமான, சூரிய நமஸ்காரம் பயிற்சியை, அனைத்து கல்வி நிலையங்களிலும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளை பொறுத்தவரை, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே, இந்த பயிற்சியில் பங்கேற்பர். விவேகானந்தரின் பெருமையை விளக்கும் வகையில், அவரது வாழ்க்கை வரலாறு, இந்திய கலாசாரம், பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment