தேசிய அளவில் *கல்வி நாயகி* என்னும் புதுமைக்கான விருது பெற்று தஞ்சாவூர் மாவட்ட அரசுத் தொடக்க பள்ளி ஆசிரியை சாதனை...
நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு *My Trolley* என்னும் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு சாதனைத்தை தயாரித்து தேசிய அளவில் புதுமைக்கான MP ரஞ்சன் விருதையும் கல்வி நாயகி என்னும் அங்கீகாரத்தையும் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற டிசைன் பார் சேஞ்ச் என்னும் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் நகர் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் மேரி மரிலாண்ட் அரிஸ்டா என்னும் இடைநிலை ஆசிரியர் பெற்று தமிழக கல்வித்துறைக்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்..
அவரை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி,மாவட்ட கல்வி அலுவலர் ரங்கநாதன், உதவித்தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment