மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 10, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல'

பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து நீக்கிய மத்திய அரசு, மத்திய அரசின் ஊழியர்களுக்கு நாடு
முழுவதும் பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என அறிவித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுப்புப் பட்டியலில் இருந்து வந்தது. ஆனால், இன்று பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்றும் கூறியுள்ளது.
பொங்கல் திருநாளைக் கொண்டாடுபவர்கள் மட்டும் அந்த நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மத்திய அரசு ஊழியர்கள் முன் அனுமதி பெற்றே பொங்கலுக்கு விடுமுறை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம், கோரிக்கை, வலியுறுத்தல் வலுப்பெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment