தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பாவை விழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை  - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 19, 2017

தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பாவை விழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை 

தேவகோட்டை பள்ளி மாணவர்கள்
பாவை விழா போட்டிகளில்
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை 

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றி

தேவகோட்டை – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் சிவகங்கையில்  நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.இவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
                          தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் திருப்பாவை,திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் சிவகங்கை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் பிரிஜித் என்கிற மாணவரும், திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெங்கட்ராமன் என்கிற மாணவரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வெற்றி பெற்றனர்.கடந்த ஆண்டும் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் இப்பள்ளி மாணவியே முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.இப்போட்டிகளில் கனிஷ்கா,திவ்ய ஸ்ரீ,ஜெயஸ்ரீ,ஆகாஷ்,அம்மு ஸ்ரீ,ஜனஸ்ரீ,கிஷோர்குமார்,சந்தியா,ராஜேஷ்,உமா மகேஸ்வரி  மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றனர்.வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களையும்,பயிற்சி அளித்த முத்து லெட்சுமி,முத்துமீனாள் ஆசிரியைகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். தேவகோட்டை வட்டார அளவிலான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

பட விளக்கம் : தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் சிவகங்கையில்  நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மற்றும்  முதலிடம் பிடித்த மாணவர்களை பாராட்டும்  விழா பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் பள்ளியில்  நடைபெற்றது.

No comments:

Post a Comment