SBI கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 2, 2017

SBI கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது!

SBI கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது!
நாட்டிலேயே மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கடனுக்கான ஆண்டு வட்டி வகிதத்தை குறைத்துள்ளது.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு கடன் அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அந்த வங்கி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக எஸ்பிஐ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடன் தொகைக்கு எம்சிஎல்ஆர் அடிப்படையில் வசூலிக்கப்பட்டுவந்த வட்டி வகிதத்திலிருந்து 0.9 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனுக்கான
வட்டி விகிதம் இனி ஓராண்டுக்கு 8 சதவீதமாக இருக்கும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் எம்சிஎல்ஆர் விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கியில் பெறப்படும் கடனுக்கு ஆண்டு வட்டியாக 8.45 சதவீதம் வசூலிக்கப்படும். முன்பு, அந்த வங்கியில் கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருந்தது.
இதேபோல், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.65 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதம் வரை குறைத்துள்ளது.
வங்கிகளின் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை வரவேற்பதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
முன்னதாக, புத்தாண்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்தியபோது ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

No comments:

Post a Comment