இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 16, 2017

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்
இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ்
1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, ஆங்கில மொழித்திறன் பயிற்சி, தொடர்பு ஆங்கிலம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இடம் பெற்றுள்ள, கணிதம், இயற்பியல் போன்ற அடிப்படை பாடங்களை நடத்த, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
'சமீபத்தில் நடந்து முடிந்த, அண்ணா பல்கலையின் தேர்வில், இயற்பியலில், 70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதன் எதிரொலியாகவே, கணிதம், இயற்பியலில், இந்த ஆண்டு முதல், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது' என, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment