சிறுபான்மையின மாணவர்களுக்காக நவோதயா பாணியிலான 100 பள்ளிகள், 5 உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த பள்ளிகள் அமைக்கப்படும். சிறுபான்மையினருக்கு மரியாதையுடன் கூடிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்களது கல்வியில் கவனம் செலுத்துகிறோம்.
இந்த பள்ளிகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு 40 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். இந்த பள்ளிகள் அடுத்த ஆண்டு அமைக்கப்படும். ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்க ஆர்வம் காட்டியுள்ளன.
இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாகவும் அவர்களின் கல்வியறிவை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment