இன்ஜி., கவுன்சிலிங் நாளை(ஆக.,11) நிறைவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, August 10, 2017

இன்ஜி., கவுன்சிலிங் நாளை(ஆக.,11) நிறைவு

இன்ஜி., கவுன்சிலிங் நாளை(ஆக.,11) நிறைவு
இன்ஜி., பொது கவுன்சிலிங் நாளை(ஆக.,11) முடிகிறது. நேற்று வரை, 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. 
அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23ல், பொது கவுன்சிலிங் துவங்கியது. இதில் விண்ணப்பித்த, 1.35 லட்சம் பேரில், தினமும், 5,000 முதல், 8,000 பேர் வரை அழைக்கப்பட்டு, அவர்களுக்கு, கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 17 நாட்களாக நடத்தப்பட்டு வரும் கவுன்சிலிங், நாளை முடிகிறது.

நேற்று வரை கவுன்சிலிங் மூலம், 79 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. இன்னும், 96 ஆயிரத்து, 141 இடங்கள் காலியாக உள்ளன. இன்றும், நாளையும், அதிகபட்சம், 8,000 இடங்கள் நிரம்பும். கவுன்சிலிங்கின் முடிவில், 88 ஆயிரம் இடங்கள் காலியாகும் என, தெரிகிறது

No comments:

Post a Comment