பிழையுடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்த வழக்கில், மனுதாரருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜமீல் பாட்ஷா என்பவர் சென்னை மாவட்ட
(தெற்கு) நுகர்வோர் குறை தீர்மன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த எனது மகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினாள். அதில், வேதியியல் பாட செய்முறை தேர்வு மதிப்பெண்ணில் 50 என இருப்பதற்கு பதில் 5 மதிப்பெண் என பிழையாக இருந்தது. அதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க. அவர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பினர். அசல் சான்றிதழ் கிடைக்கும்போது பிழை திருத்தப்பட்டிருக்கும் என உறுதி அளித்தனர்.
ஆனால், 2012 மார்ச் 30-ம் தேதி அளிக்கப்பட்ட அசல் சான்றிதழில் செய்முறை தேர்வு மதிப்பெண் 5 என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், ஏப்ரல் 13-ம் தேதிதான் திருத்தப்பட்ட அசல் சான்றிதழ் வழங்கப்பட்டது. எனவே, சேவை குறைபாடு, தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க பள்ளி நிர்வாகத்துக்கும், பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கும் உத்தரவிட வேண் டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர் வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால் ராஜசேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: பிழையுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதால் சரியான நேரத்தில் மனுதாரரின் மகன் உயர்கல்வியில் சேர முடியவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். ஆனால், தேர்வு முடிவுகள் வெளி யான தேதியிலிருந்து 21 நாட்களில் திருத்தப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இருப்பினும், தவறான மதிப் பெண் சான்றிதழ் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகி யோர் மனுதாரரின் மன உளைச்ச லுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை வழங்க வேண்டும். அதோடு, வழக்கு செலவாக ரூ.5,000-த்தை யும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment