கருத்தரங்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ''அரசுத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பள்ளிக் கல்வித்துறை உள்ளது. மூன்று மாதத்துக்குள் கல்வித் திட்டம் மாற்றியமைக்கப்படும். தமிழக கல்வித்துறை அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும்.
பள்ளி மாணவர்களுக்கு 3 விதமான சீருடைகள் வழங்கப்படும். வரும் காலங்களில் 2 செட் பள்ளி சீருடைகள் , 2 செட் சீருடைகள் வாங்கத் தேவையான பணத்தை, மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிபிஎஸ்இக்கு இணையாக, மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும். மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள சனிக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய 30 மணி நேரம் கொண்ட சிடி வழங்கப்படும். அதில் பாடத் திட்டங்கள் அடங்கும். 54 ஆயிரம் கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment