இறப்பு பதிவுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்துவதால் முறைகேட்டை தடுக்க முடியும். என்றாலும் இப்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட இறப்பு பதிவு
அக்டோபர் 1-ம் தேதி முதல் தொடங்கும் என இந்திய தலைமை பதிவாளர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் நேற்று அளித்த விளக்கத்தில், “இறப்பு பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை. இறந்தவரின் ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு எண்ணை விண்ணப்பதாரர் அறியாதபட்சத்தில், ‘தான் அறிந்தவரை இறந்தவர் ஆதார் எண் பெறவில்லை’ என்று விண்ணப்பதாரர் சான்றிதழ் தரத் தேவையில்லை. எனினும் ஆதார் எண் பயன்படுத்துவதன் மூலம் இறந்தவரின் உறவினர்கள் தரும் விவரங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment