தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ தரத்துக்கு இணையான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: நிபுணர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 5, 2017

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ தரத்துக்கு இணையான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: நிபுணர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையானதாக மாற்றியமைக்க வேண்டும் என பாடத்திட்ட மேம்பாட்டு நிபுணர் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் மெட்ரிக்பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் இருந்தால் நீட் போன்ற அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றி பெறுவர் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் அமலில் உள்ள பாடத்திட்டத்தை மேம்படுத்தவும், மாற்றி அமைக்கவும், கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருப்பதுபோல தமிழகத்திலும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாக பாடத் திட்டத்தை மேம்படுத்த நிபுணர் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment