முதுகலை ஆசிரியர்கள் நியமனத்தில்மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை !! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 9, 2017

முதுகலை ஆசிரியர்கள் நியமனத்தில்மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை !!


முதுகலை ஆசிரியர்கள் நியமனத்தில்மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை !!
Flash News
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி
*3456 முதுநிலை ஆசிரியர்கள்,உடற்தகுதி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றம் அனுமதி.
மாற்றுத்திறனாளிகள் இடத்தை நிரப்ப தடை
4% ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை தற்போதைக்கு நிரப்பக்கூடாது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடங்களை நிரப்ப தடை விதித்தும் அந்த இடங்களை காலியாக  வைக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவர் நம்புராஜன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறனாளிகளின் உடற்குறைபாடு தன்மை குறித்து 2 வாரத்தில் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து மாற்றுத்திறனாளிகள் உடற்குறைபாட்டை நிர்ணயிக்கும் வழக்கு விசாரணை ஆக.28 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment