RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 11, 2017

RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.

RTE - இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டணம் நிர்ணயம் அரசாணை வெளியீடு.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி, மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும், மற்ற பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் கட்டணச் செலவை நிர்ணயித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
அதன்படி, மலைப்பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 385 (மற்ற பகுதியைச் சேர்ந்த முதல் வகுப்பு குழந்தைக்கு ரூ.25 ஆயிரத்து 155) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு குழந்தைகள் வரை, ரூ.25 ஆயிரத்து 155-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து431 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment