புதிய கால அட்டவணை நவம்பர் 1-ல் வெளியீடு தென்மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் குறையும் வாய்ப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 28, 2017

புதிய கால அட்டவணை நவம்பர் 1-ல் வெளியீடு தென்மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் குறையும் வாய்ப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நவம்பர் 1-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்படி தென்மாவட்டங்களுக்குச் செல்லும்
முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘தெற்கு ரயில்வே, ரயில் காலஅட்டவணை ஆண்டுதோறும், அக்டோபர் 1-ம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு, அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அதுவரை தற்போதைய ரயில் கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும்' என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதற்கிடையே, தற்போது ரயில்கால புதிய அட்டவணை வெளியீடு நவம்பர் 1-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் காலஅட்டவணை அறிவிக்கும்போது ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில்களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கல், இரட்டை வழிப்பாதை அமைத்தல், அகலப்பாதை அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அதுபோல், சென்னை - மதுரை வரையில் இரட்டைப் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் தற்போதுள்ளதைக் காட்டிலும் விரைவாக செல்லும். காலதாமதம் தவிர்த்து சரியான நேரத்துக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டுமெனக் கோட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
எனவே, சென்னை யில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதற்கான முழு விபரங்கள் நவம்பரில் வெளியிடவுள்ள புதிய கால அட்ட வணையில் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment