B.Ed - திறந்தநிலை பல்கலையில்பி.எட்., 'அட்மிஷன்'
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.பல்கலையின் பதிவாளர், எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில்,2018-க்கான பி.எட்., பொது; பி.எட்., சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டு உள்ளது.
பி.எட்., பொது படிப்பில் சேர, டிப்ளமா ஆசிரியர் படிப்புடன், இளநிலை பட்டம் பெற்று, தற்போது, ஆசிரியராக பணியாற்ற வேண்டும். பி.எட்., சிறப்பு கல்வியில் சேர, இந்திய மறுவாழ்வு கழக நெறிமுறைகள் - ௨௦௧௫ன் படி, தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப நகல் மற்றும் விளக்க கையேட்டை, பல்கலையின், www.tnou.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல்விபரங்களுக்கு, 044 - -2430 6600, 2430 6617 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment