பேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 29, 2017

பேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு

சர்வதேச அளவில், அனைத்து நாடுகளிலும், மனிதர்களால் எதிர்கொள்ள முடியாத வகையில், இயற்கை பேரழிவுகளும், இயற்கை பேரிடர் சம்பவங்களும், அதிகரித்த வண்ணம் உள்ளன. 
இவற்றின் பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக, தேசிய பேரிடர் பள்ளி பாதுகாப்பு கொள்கையை வகுத்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியும், பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவேண்டும். ’இயற்கை பேரிடர் நேரங்களில், மாணவ -- மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் போன்றோர், கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என,சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment