"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பில் 1 - 8 வகுப்புகளை சேர்ந்த 1,28,436 மாணவ, மாணவிகளுக்கு 2,71,697 புத்தகங்கள், 5,49,504 நோட்டுக்கள் வழங்கப்படும் பணிகளை கார்மேகம் ஆய்வு செய்தார்.
தொடக்க கல்வி அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தார்.கார்மேகம் கூறுகையில், "மாநிலம் முழுவதும் செப்., 27க்குள் நோடல் மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு புத்தகம், நோட்டுக்கள் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். வினியோக பணியில் தாமதமோ, புகார்களோஎழாமல் தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment