நவம்பர் மாதம் குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு பரிசுகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 23, 2017

நவம்பர் மாதம் குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு பரிசுகள்

முதல் முறையாக INLAND LETTER ல் competition...
நன்றி சென்னை சிறுதுளி
நன்றி கனிந்த இதயங்கள்
நன்றி தஞ்சை கூடல்

நன்றி Seshadri Subramanian Seshadri

மகிழ்வாய்...

கனவு மெய்பட வேண்டும்.....

தமிழ் நாட்டில் உள்ள மரியாதைக்குரிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்...( ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,மேல்நிலை பள்ளி)

சென்னை சிறுதுளி ,கனிந்த இதயங்கள்,தஞ்சை கூடல்  சார்பாக வருகின்ற நவம்பர் மாதம் குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்க  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அதனை எவ்வாறு வெளி கொண்டு வருவது பற்றிய பயிற்சி(போட்டி)
இது..

மாணவர்களின் திறமையை வளர்க்கலாம்...மதிப்பை உயர்த்தலாம்!

ஆசிரியர்களாகிய நாம் மாணவர்களின் தனித்திறன் வளர்த்து தன்னம்பிக்கை பெறவைப்போம்!!!

ஒருவரின் தனித்திறனே மற்றவர்களிடமிருந்து அவரை மேன்மையாகக் காட்டும்.

கல்வி என்பது பாடப் படிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல, தனித்திறன்களை வளர்த்துக்கொண்டு எல்லோரது பாராட்டுகளைப் பெறுவதும் ஆகும்

தனித்திறன்கள் என்பது என்ன???

ஓவியம், கதை, கவிதை எழுதுதல், தோட்டம் அமைத்தல், பாடல் பாடுதல், நகைச்சுவை, கட்டுரை எழுதுதல்,கதை சொல்லுதல் பேச்சாற்றல் முதலியன.

அனைவரிடமும் ஏதாவது ஒரு தனித்திறன் இருக்கும். அது அவர்களின் சூழ்நிலை, நேரம், வயதுக்கு ஏற்ப வெளிப்படும் ...
ஆனால் இது சற்று வித்தியசமான போட்டிகள் ...

எதற்காக நாங்கள் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்துகிறோம்

1)மாணவர்களுக்கு
புதியன படைக்கும் திறன் வளரும்.

2) எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.

3) சிக்கல் ஏற்பட்டால், அதற்கு எளிய வழியில் தீர்வு காணலாம்.

4)நன்றாகப் பழகும் திறன் மேலோங்கும், பகுத்து அறியும் திறன் வளரும்.

5)கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன், நினைவாற்றல் வளரும்.

6)பள்ளிப் பாடத்திலும் நம் தனித்திறன் செறிவைக் காட்டலாம்.

7)மாணவர்களின் மனதில் காற்றாக தனித்திறனை வளர்ப்போம். தேவைப்படும்போது தென்றலாக வெளிப்படுத்துவோம்...

போட்டியின் வரைமுறைகள்;

நான்கு குழுக்களாக பிரிக்கப்படும் ஒவ்வொரு குழுக்கும் ஒரு விருது வழங்கப்படும்...

அதவாது வகுப்புகள் வாரியாக...
1)1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு  திருக்குறள் பொருள் கூறுதல் மற்றும் வண்ணம் படங்கள் வரைதல்  (அ) ஒவியம்

2)6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு  கதை சொல்லுதல்,கட்டுரை,
மற்றும் ஒவியம்..

3) 8 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை.

கவிதை, கட்டுரை ,ஒவியம் , கதை சொல்லுதல்
.மற்றும்

4) 10 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை..உள்ள குழந்தைகளுக்கு கவிதை, கட்டுரை ,ஒவியம் ,கதை சொல்லுதல் , slogan writing..

அனைத்தும் இன்லன்ட் லெட்டரில் ( கடிதத்தில்) தான் எழுதப்பட வேண்டும்..முதன்முறையாக....

ஒரே மாணவர் அனைத்து செயல்பாடுகளையும் செய்ய வேண்டும் ...

தலைப்புகள் சமூக நலன் சார்ந்த கட்டுரைகள்.
மேலும் போட்டிகள் பற்றிய விபரங்கள் தெரிய
உங்கள் what's app number ,பெயர், பள்ளியை Jaya venkat வலைதளத்தில் உள்ள inbox ல் பதிவிடவும்...

What's app group அக்டோபர் 2 ல் உருவாக்கப்படும்....

அது வரை உங்கள் பள்ளியையும் உங்கள் அருகில் உள்ள பள்ளிகளையும் இதில் இணையுங்கள்

ஆசிரியர்கள் தங்கள் அருகில் உள்ள பள்ளிகளையும் குழந்தைகளையும் பங்கு பெற செய்யுங்கள் மகிழ்வுடன்....

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும்  பங்கேற்க செய்யும் பள்ளிக்கு சிறப்பு award வழங்கப்படும்....

அக்டோபர் 15  2017 கடைசி நாள்

மாவட்டத்திற்கு ஒரு பிரிவில் ஒரு குழந்தைகள் என
4*32 =128
மாற்று திறனாளி குழந்தைகளுக்கு 22 என 150 பரிசுகள் வழங்கலாம் என முடிவெடுத்துள்ளோம்....

நமது மாணவர்களின் திறமையை உலகறிய செய்வோம்.....
  சிற்பங்களை வாழ்த்துவோம்...

.மகிழ்வித்து மகிழ்......

Click Here

No comments:

Post a Comment