பள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்
'தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில்,'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துாய்மை இந்தியா திட்டத்தை, ஒவ்வொரு துறைகளிலும் நடை முறைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, செப்., 15 முதல், இத்திட்டம் குறித்து, ஒவ்வொரு துறையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, அக்., 2 வரை, பள்ளிகளில் கட்டாயம் நடத்த வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment