ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் 7வது ஊதிய உயர்வு அறிக்கை குறித்து தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. இதில் ஆஜரான தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், செப்.30ஆம் தேதி நிபுணர் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில், அரசின் நிதிநிலை உள்ளிட்டவற்றை வைத்து நான்கைந்துமாதங்களில் முடிவெடுக்கப்படும் என்றார். மேலும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும் நவம்பரில் அறிக்கைதாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர், இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் காலதாமதம் மட்டுமே ஆவதாகவும் கூறினர்.
தமிழக அரசின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிபுணர் குழு அளிக்கும்அறிக்கை குறித்து அக்டோபர் 13 தேதிக்குள் முடிவெடுக்க உத்தரவிட்டனர். முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் ஊழியர்களுக்கு இடைக்காலநிவாரணத்தொகை வழங்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யக்கூடாது எனவும்,அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment