மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக
மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இது தொடர்பாக இன்று அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மாணவர்களுக்கு கல்வி வினாக்கள் அடங்கிய சி.டி. இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பல்துறை பேராசிரியர்களைக் கொண்டு 412 மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment