குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 23, 2017

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.
சிபிஎஸ்இ பாடத்தில் 1ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு இந்த அளவுக்கு பாடச் சுமையை கொடுப்பது சரியல்ல என்றும், பாடச் சுமையைக் குறைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விளையாட வேண்டிய வயதில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோன்ற பல காரணங்களுக்காக குழந்தைகள் விளையாடும் நேரத்தை வீணடிக்கிறோம்.

ஆடிப்பாட வேண்டிய வயதில் குழந்தைகளை மௌனியாக வைத்திருக்கிறோம் என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.மேலும், புருஷோத்தமனின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி கிருபாகரன், 4 வாரத்தில் இதுகுறித்து முடிவு செய்யுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment